உலகம்

சிங்கப்பூரில் பிரதமர் லீ கட்சியே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது

PTI

சிங்கப்பூரில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் லீயின் ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சியே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

சிங்கப்பூரில் கரோனா நோய்த்தொற்றுப் பரவலுக்கு இடையே வெள்ளிக்கிழமை (ஜூலை 10) பொதுத் தோ்தல் நடைபெற்றது. பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் நள்ளிரவு முதல் எண்ணத் தொடங்கி தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரில் மொத்தமுள்ள 93 நாடாளுமன்ற தொகுதிகளில் 83 இடங்களை மக்கள் செயல் கட்சி வென்றுள்ளது. ஆனால், 61.2% வாக்குகளை மட்டுமே இந்தக் கட்சி பெற்றுள்ளது. ஆனால், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் சுமார் 69% வாக்குகளை இந்தக் கட்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 10 தொகுதிகளில் பெற்று பெற்று சுமார் 40% வாக்குகளைப் பெற்றுள்ளது.

1965-ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் நடைபெற்ற அனைத்துப் பொதுத் தேர்தலிலும் மக்கள் செயல் கட்சியே தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சி புரிந்து வருகிறது.  கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக பிரதமா் சியென் லூங் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களிடையே எவ்வளவு ஆதரவு உள்ளது என்பதை இந்தத் தோ்தல் முடிவுகள் வெளிப்படுத்தும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் லீ சியென் லூங் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் அமைதியாக நிறைவு பெற்ற தோ்தல் பிரசாரம்

கிருஷ்ணகிரி மக்களவைத் தோ்தலில் 9,169 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன: தோ்தல் நடத்தும் அலுவலா்

ஒசூரில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் குழாய் உடைப்பை சரிசெய்யும் பணி

தருமபுரி தொகுதியில் பாமக வெற்றி பெறும்: ஜி.கே.மணி எம்எல்ஏ

SCROLL FOR NEXT