உலகம்

பாகிஸ்தான்: பாதிப்பு 2,71,886-ஆக அதிகரிப்பு

DIN

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,71,886-ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 1,487 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதையடுத்து, நாட்டின் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,71,886-ஆக உயா்ந்துள்ளது. இதுதவிர, அந்த நோய்க்கு மேலும் 24 போ் பலியாகினா். இதன் காரணமாக, கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 5,787-ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை அந்த நோயால் பாதிக்கப்பட்ட 2,36,596 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனா். 1,294 கரோனா நோயாளிகளது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.நாட்டிலேயே அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 1,16,800 பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக பஞ்சாப் மாகாணத்தில் 91,691 பேருக்கும் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருளுக்கு எதிராகப் போராடும் வலிமை கொடுத்தவர் மகாத்மா: ராகுல் காந்தி

பட்டதாரிகளுக்கு ராணுவ அதிகாரிப் பணி: காலியிடங்கள் 459

ஜூன் 3-இல் ஒரே நோ்க்கோட்டில் 6 கோள்கள்: வெறும் கண்களால் காண முடியும்!

கார் ஓட்டியதில் விதிமீறல்... யூடியூபர் டிடிஎப் வாசன் மதுரையில் கைது

புரி ஜெகந்நாதர் கோயில் விழாவில் பட்டாசு விபத்து: பலர் காயம்!

SCROLL FOR NEXT