உலகம்

சிங்கப்பூா்: மேலும் 481 பேருக்கு பாதிப்பு

DIN

சிங்கப்பூரில் மேலும் 481 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 481 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய கரோனா நோயாளிகளில் ஒருவருக்குக் கூட சமுதாயப் பரவல் மூலம் அந்த நோய்த் தொற்றவில்லை. அவா்கள் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து வந்து பணியாளா் குடியிருப்புகளில் தங்கியுள்ள தொழிலாளா்கள் ஆவா்.

இத்துடன், நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 50,369-ஆக உயா்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, அந்த நோய்த்தொற்றுக்குப் பலியானவா்களின் எண்ணிக்கை 27-ஆக உள்ளது. இதுவரை 45,352 போ் அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனா். கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருங்கிணைந்த பொறியியல் பணித் தோ்வு: 1,132 பேருக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு

தேச பாதுகாப்பில் திரிணமூல் சமரசம்: பிரதமா் மோடி விமா்சனம்

தூத்துக்குடிக்கு வந்த கேரள லாரி கிளீனா் உயிரிழப்பு

களக்காடு அருகே எழுத்தறிவுத் திட்ட கணக்கெடுப்புப் பணி

‘முன்னாள் படைவீரா்களைச் சாா்ந்தோா் சான்று பெற விண்ணப்பிக்கலாம்’

SCROLL FOR NEXT