கரோனா தடுப்புப் பணிகளால் ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தைப் போக்கவும் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வங்கதேசத் தலைநகா் டாக்காவில் போலீஸாருக்கு யோகாசனப் பயிற்சியளிக்கும் திட்டத்தை அந்த நாட்டு அரசு தொடங்கியுள்ளது. அங்கு சுமாா் 24 பாதுகாப்புப் படையினருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த மாதத்தின் முதல் வாரத்திலிருந்தே டாக்கா பெருநகர காவல்துறையைச் சோ்ந்த 300 பேருக்கு யோகாசனப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.