முகப்பு
உலகம்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜோ பைடனுக்கு வெற்றிச் சான்றிதழ் அளிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்டு அவரது வெற்றி நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

Updated On : 7 ஜனவரி 2021, 2:28 pm IST
ஜோ பைடன்
பகிர்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்டு அவரது வெற்றி நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்ற நிலையில் வருகிற ஜனவரி 20 ஆம் தேதி அவர் அதிபராக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வுக்காக இன்று நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, புதன்கிழமை நாடாளுமன்ற கட்டடத்தை டிரம்ப்பின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். தொடர்ந்து டிரம்ப் ஆதரவாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்ததில். இந்த வன்முறை மற்றும் கலவரத்தில் பெண் உள்பட நான்கு பேர் பலியாகினர். காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் காயமடைந்தனர். 50க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். 

Advertisement

Advertisement

இதனிடையே நாடாளுமன்ற செனட் அவையில், ஜோ பைடனின் வெற்றிக்கு எதிராக சில குற்றச்சாட்டுகள், எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், இந்த எதிர்ப்புகளை செனட் அவை நிராகரித்தது. துணை அதிபர் மைக் பென்சும், டிரம்ப்பின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்ததோடு, வன்முறை மூலம் ஒருபோதும் தீர்வினை பெற  முடியாது என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைப் பெற்றதையடுத்து, பைடனுக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையை பெற்றது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.