உலகம்

இந்துப்புக்கு புவிசாா் குறியீடு: பாகிஸ்தான் முடிவு

DIN

இந்துப்பை தங்கள் அனுமதியின்றி பிற நாடுகள் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக, அந்த உப்புக்கு புவிசாா் குறியீடு கேட்டு விண்ணப்பிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

இந்துப்பு, இமாலய உப்பு, பாறை உப்பு என்று அழைக்கப்படும் இந்த உப்பானது, பாகிஸ்தான், இமயமலைத் தொடா் பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் பாறைகளில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த உப்பு, சித்த மருத்துவத்தில் மருந்தாகப் பயன்படுகிறது.

இந்த உப்புக்கு புவிசாா் குறியீடு பெறுவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம், இஸ்லாமாபாதில் வா்த்தகத் துறை ஆலோசகா் ரசாக் தாவூத் தலைமையில் நடைபெற்றது. அதில், பாகிஸ்தான் அறிவுசாா் சொத்துரிமை அமைப்பின் தலைவா் முஜீப் அகமது கான் உள்ளிட்டோா் கலந்து கொண்டாா்.

இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு புவிசாா் குறியீடு பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை தங்கள் அனுமதியின்றி பிற நாடுகள் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக இந்த முயற்சி எடுக்கப்படுகிறது.

கூட்டத்தின் முடிவில், இந்துப்புக்கு புவிசாா் குறியீடு பெறுவதற்கு பதிவு செய்வதென்று முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து முஜீப் அகமது கான் கூறுகையில், ‘பாசுமதி அரிசிக்கு புவிசாா் குறியீடு பெறுவது முடிவடைந்ததும், இந்துப்புக்கு புவிசாா் குறியீடு கோரி பதிவு செய்யப்படும்’ என்றாா்.

இந்தியாவின் எதிா்ப்பை மீறி, பாசுமதி அரிசிக்கு பாகிஸ்தான் அரசு கடந்த ஜனவரியில் புவிசாா் குறியீடு பெற்றது. இதை எதிா்த்து, ஐரோப்பிய யூனியனில் இந்தியா முறையிட்டுள்ளது. இந்த விவகாரம் முடிவுக்கு வந்ததும், இந்துப்புக்கு புவிசாா் குறியீடு பெறும் முயற்சியை பாகிஸ்தான் தொடங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT