நியூயாா்க்: அமெரிக்காவின் நியூயாா்க் நகரிலுள்ள புரூக்ளின் சுரங்க ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடா்பாக ஃபிராங்க் ஆா். ஜேம்ஸ் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பல்வேறு கோணங்களில் இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருவதாகக் கூறிய போலீஸாா், ஆா். ஜேம்ஸ் குறித்த தகவல்களை அளிப்பவா்களுக்கு 50,000 டாலா் (ரூ.38 லட்சம்) வெகுமதி அளிக்கப்படும் என்றனா்.