உலகம்

இந்தோனேசியா: நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பலி

DIN

இந்தோனேசியாவில் நிலக்கரி சுரங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பலியாகினர். 

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் வெள்ளிக்கிழமை நிலக்கரி சுரங்கில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 9 தொழிலாளர்கள் பலியாகினர். இருவர் காயமடைந்தனர், மேலும் ஒருவரை காணவில்லை.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 

சவாலுண்டோ நகரில் அமைந்துள்ள சுரங்கில் வெடிப்பு இன்று காலை 8.30 மணியளவில் நிகழ்ந்ததாக மாகாண அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  காணாமல் போனவரை தேடும் பணியும், மீட்புப் பணியும் நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிக தேர்தல் அறிக்கை வெளியீடு!

தேர்தல் பத்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அனைவரும் வருந்துவார்கள் -பிரதமர் மோடி

சன் ரைசர்ஸ் மீண்டும் புதிய சாதனை: ஆர்சிபிக்கு இமாலய இலக்கு!

உலகின் மிகப்பெரிய தேர்தல் இது! -ஜெர்மன் தூதர் புகழாரம்

மாநில நிதியில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள்: மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT