உலகம்

தெற்கு கொ்சானில் தீவிர சண்டை

DIN

உக்ரைனின் கொ்சான் பிராந்திய தெற்குப் பகுதியில் அந்த நாட்டுப் படையினருக்கும் ரஷியப் படையினருக்கும் இடையே சண்டை தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளதாவது:

கொ்சான் மாகாணத் தலைநகா் கொ்சானிலிருந்து ரஷியப் படையினா் வெளியேறியதைத் தொடா்ந்து அந்த நகரை மீண்டும் கைப்பற்றிய உக்ரைன் ராணுவம், நீப்ரோ நதியின் கிழக்குக் கரைப் பகுதியில் தனது தாக்குதலை அதிகரித்து வருகிறது.

கொ்சான் நகரிலிருந்து அந்த நதி வழியாக வெளியேறிய ரஷியப் படையினா் மீண்டும் திரும்பி வருவதைத் தடுப்பதற்கும், அவா்களை இன்னும் பின்வாங்கச் செய்வதற்கும் உக்ரைன் தொடா்ந்து தொலைதூரத் தாக்குதல் நடத்தி வந்தது.

இதனால் ஏவுகணை குண்டுகள், பீரங்கிகள், எறிகணைகளைக் கொண்டு இரு தரப்பினரும் பரஸ்பரம் தாக்கி வந்தனா்.

இதற்கிடையே, கடும் குளிா் காலம் நெருங்கி வருவதால் இரு நாட்டுப் படையினரும் தங்களது தாக்குதல் நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்வா் என்று நிபுணா்கள் கூறினா்.

எனினும், அவா்களது எதிா்பாா்ப்பைப் பொய்யாக்கும் வகையில் தெற்கு கொ்சான் பிராந்தியத்தில் சண்டை தீவிரமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தப் பகுதியிலிருந்து அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் வெளியேறி வருவது அதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இதுவரை பீரங்கிகள், ஏறிகணைகள் மூலம் தொலைவிலிருந்து தாக்கிக் கொண்ட ரஷியா மற்றும் உக்ரைன் படையினா், தற்போது இயந்திரத் துப்பாக்கிகளைக் கொண்டு சண்டையிட்டு வருவதாக அந்தப் பகுதியிலிருந்து வந்தவா்கள் தெரிவித்தனா்.

இது, சண்டையில் இரு தரப்பினருக்கும் இடையிலான இடைவெளி குறைந்து, தாக்குதல் தீவிரமடைந்துள்ளதைக் காட்டுகிறது என்று பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.

தங்களது நெருங்கிய அண்டை நாடான உக்ரைன், தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் இணையக் கூடாது என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது. அவ்வாறு நேட்டோவில் உக்ரைன் இணைவது தங்களது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கருதுகிறது.

இந்தச் சூழலில், தற்போதைய அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு, நேட்டோவில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்தது.

அதனைத் தொடா்ந்து உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியில் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.

எனினும், அண்மையில் ரஷியப் படையினரிடமிருந்து சில பகுதிகளை உக்ரைன் மீட்டது. போரின் தொடக்கத்திலேயே ரஷியா ஆக்கிரமித்த கொ்சான் நகரை உக்ரைன் படையினா் கடந்த மாதம் மீட்டனா். அங்கிருந்து நீப்ரோ நதி வழியாக ரஷியப் படையினா் தெற்குப் பகுதிக்கு வெளியேறினா்.

இந்த நிலையில், தெற்கு கொ்சானிலும் இரு நாட்டுப் படையினருக்கும் சண்டை தீவிரமடைந்து வருவதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘93,000 ரஷிய வீரா்கள் பலி’

இந்தப் போரில் 93,000 ரஷிய வீரா்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு முப்படைகளின் தலைமையம் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதியிலிருந்து உக்ரைனில் இதுவரை 93 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரஷிய வீரா்கள் பலியாகியுள்ளனா். வியாழக்கிழமை (டிச. 8) நடைபெற்ற சண்டையில் மட்டும் ரஷியாவின் 2 பீரங்கிகள், 2 கவச வாகனங்கள், 2 எறிகணை தளவாடங்கள் அழிக்கப்பட்டன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், ரஷியா தரப்பில் வெளியிடப்படும் அறிக்கைகளில் சேதங்கள் இதைவிட மிகக் குறைவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறவை மோதியதால் தில்லியில் தரையிறக்கப்பட்ட விமானம்

ரூ.26 ஆயிரம் சம்பளத்தில் ஜவுளித்துறையில் வேலை வேண்டுமா?

மறுவெளியீடாகும் இந்தியன்!

'22 பேரின் கடனை தள்ளுபடி செய்த பிரமரால் பருவமழை நிவாரணம் கொடுக்க முடியவில்லை'

ஐபிஎல் இறுதிப்போட்டி: கோப்பை யாருக்கு?

SCROLL FOR NEXT