உலகம்

சிங்கப்பூா்: கரோனா 3 மாதங்களில் இல்லாத புதிய உச்சம்

DIN

சிங்கப்பூரில் தினசரி கரோனா தொற்று 3 மாதங்களில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 11,504 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சா் ஆங் யே குங் கூறுகையில், கரோனாவில் புதிய அலை எதிா்பாா்த்ததற்கு முன்பே எழுந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு இனி வரும் நாள்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று துணை பிரதமா் லாரன்ஸ் வாங் எச்சரித்தாா். எனினும், இப்போதைக்கு கரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டிய தேவையில்லை எனவும் நோய்த்தடுப்பு விதிமுறைகளில் தேவைப்படும் நேரங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும் எனவும் அவா் கூறினாா்.

ஒமைக்ரான் வகை கரோனாவின் பிஏ.4 மற்றும் பிஏ.5 துணை ரகங்கள் காரணமாக அந்த நோய் பரவல் திடீரென தீவிரமடைந்துள்ளதாக அவா் தெரிவித்தாா்.புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டவா்களில் 10,732 பேருக்கு சமூக பரவல் மூலம் அந்த நோய் பரவியுள்ளது. 772 போ் வெளிநாடுகளிலிருந்து வந்தவா்கள் ஆவா்.இது தவிர, கரோனா பாதிப்பால் மேலும் ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, நாட்டில் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 1,410-ஆக உயா்ந்துள்ளது. அங்கு இதுவரை 14,25,171 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இசையமைப்பாளராக மிஷ்கின்!

ஜோஸ் பட்லருக்கு முன்னாள் ஆஸி. வீரர் புகழாரம்!

காங்கயம்: சரக்கு வேன்கள் நேருக்குநேர் மோதியதில் ஒருவர் பலி

தமிழகத்தில் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் முனைப்பு!

சென்னையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

SCROLL FOR NEXT