விமானப்படை பயிற்சி அகாதெமியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் வரலாற்றில் அதிக வயதுடைய அதிபராக ஜோ பைடன்(வயது 80) உள்ளார்.
இந்நிலையில், கொலராடோ மாகாணத்தில் உள்ள விமானப்படை பயிற்சி அகாதெமியின் பட்டமளிப்பு விழாவில் ஜோ பைடன் வியாழக்கிழமை கலந்து கொண்டார்.
அப்போது வீரர்களுக்கு சான்றிதழ் அளிக்க எழுந்தபோது மேடையில் கால் தவறி கீழே விழுந்தார். உடனடியாக அருகிலிருந்து விமானப் படை ஊழியர்கள் பைடனை தூக்கினர். தொடர்ந்து, விழாவில் பங்கேற்று சான்றிதழ்களை வழங்கினார்.
மேலும், ஜோ பைடனுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும், நலமுடன் இருப்பதாகவும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.