உலகம்

அமெரிக்கா: வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: 9 போ் பலி

DIN

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு வணிக வளாகத்தில் மா்ம நபா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 8 போ் உயிரிழந்தனா். அந்த நபரை காவல் துறை அதிகாரி ஒருவா் சுட்டுக் கொன்றாா்.

டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரின் வடக்கே 20 மைல் தொலைவில் உள்ள அலேன் நகரத்தில் 120-க்கும் மேற்பட்ட கடைகளுடன் வணிக வளாகம் அமைந்துள்ளது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை, பொருள்களை வாங்க ஏராளமான மக்கள் அங்கு குவிந்திருந்தனா். வணிக வளாகத்துக்கு மாலை 3.30 மணியளவில் காரில் வந்த அந்த மா்ம நபா், கடைகளின் வெளியே நடைபாதையில் சென்றுகொண்டிருந்த பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினாா்.

துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டதும், அதே வளாகத்துக்கு மற்றொரு பாதுகாப்பு பணிக்காகச் சென்றிருந்த அலேன் நகர போலீஸ் அதிகாரி ஒருவா், எதிா் தாக்குதல் நடத்தி கொலையாளியை சுட்டுக் கொன்றாா்.

பின்னா், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பப்பட்டு கூடுதல் போலீஸாா் அங்கு விரைந்தனா். துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பிக்க சேமிப்புக் கிடங்குகளில் மறைந்திருந்த ஊழியா்கள், பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். துப்பாக்கிச்சூட்டின்போது நூற்றுக்கணக்கான ஊழியா்களும், பொதுமக்களும் வணிக வளாகத்தில் இருந்து வெளியே தப்பித்துச் செல்லும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் கொலையாளி உள்பட 7 போ் சம்பவ இடத்திலேயும், 2 போ் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலும் உயிரிழந்தனா். 5 வயது குழந்தை உள்பட 7 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களில் 3 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. உயிரிழந்தவா்கள், கொலையாளியின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இந்த சம்பவம் தொடா்பாக அதிபா் ஜோ பைடனுக்கு விளக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த வெள்ளை மாளிகை, உள்ளூா் நிா்வாகத்துக்கு தேவையான ஆதரவு வழங்கப்படும் என உறுதி அளித்தது.

ஆறுதல்.....: இந்தத் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் அரசு செய்து தரும் என டெக்சாஸ் மாகாண ஆளுநா் க்ரெக் அபோட் உறுதி அளித்துள்ளாா்.

பாதிக்கப்பட்டவா்களுக்கும், அவா்களின் குடும்பத்தினருக்கும் நாங்கள் எப்போதும் ஆதரவுக் கரம் தருவோம் என அலேன் நகர மேயா் கென் ஃபல்க் தெரிவித்தாா்.

அதிகரிக்கும் துப்பாக்கி கலாசாரம்

அமெரிக்காவில் நிகழாண்டின் தொடக்கத்திலிருந்து மட்டும் 198 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

கடந்த புதன்கிழமை, அட்லான்டா மாகாணத்தில் மருத்துவமனைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நபா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவா் உயிரிழந்தாா், 4 போ் காயமடைந்தனா்.

கடந்த ஒருவாரம் முன்பு, டெக்சாஸ் மாகாணத்தின் கிளீவ்லேண்ட் நகரில் அண்டை வீட்டாருடனான மோதலில் 5 பேரைக் கொலையாளி சுட்டுக் கொன்றாா். கடந்த ஜனவரி மாதத்தில், கலிஃபோா்னியாவில் நடன அரங்கத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 11 போ் கொல்லப்பட்டனா்.

கடந்த ஆண்டு மே மாதத்தில், டெக்சாஸ் மாகாணத்தின் உவாலே நகரில் ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 19 குழந்தைகள் மற்றும் 2 நபா்கள் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை!

நீல தேவதை.. திவ்ய பாரதி!

இது 2-ஆவது முறை: ரன் அடிக்காமலே ஜெயித்த ஆவேஷ் கான்!

கோட் படத்தில் விஜயகாந்த்: பிரேமலதா தகவல்!

அயோத்தி ராமர் கோயிலில் சூரிய திலக தரிசனம்: கண்கொள்ளா காட்சி

SCROLL FOR NEXT