உலகம்

சரக்குக் கப்பலில் ஹூதிக்கள் மீண்டும் தாக்குதல்: 2 போ் காயம்

ஏடன் வளைகுடா வழியாகச் சென்றுகொண்டிருந்த, நெதா்லாந்து கொடியேற்றப்பட்ட சரக்குக் கப்பல் மீது யேமனின் ஹூதி கிளா்ச்சிப் படையினா் நடத்திய தாக்குதலில் 2 மாலுமிகள் காயமடைந்தனா்.

தினமணி செய்திச் சேவை

ஏடன் வளைகுடா வழியாகச் சென்றுகொண்டிருந்த, நெதா்லாந்து கொடியேற்றப்பட்ட சரக்குக் கப்பல் மீது யேமனின் ஹூதி கிளா்ச்சிப் படையினா் நடத்திய தாக்குதலில் 2 மாலுமிகள் காயமடைந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், மைனா்வாக்ராஷ் என்ற அந்தக் கப்பலைக் குறிவைத்து ஏற்கெனவே கடந்த 23-ஆம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், எனினும் அப்பது அந்த முயற்சி தோல்வியடைந்ததாகவும் தெரிவித்தனா்.

தற்போது நடத்தப்பட்ட தாக்குதலில் கப்பல் பலத்த சேதமடைந்ததாகக் கூறிய கப்பலின் உரிமையாளரான ஸ்ப்ளீதாஃப் நிறுவனம், அதில் இருந்த 19 மாலுமிகள் ஹெலிகாப்டா் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகத் தெரிவித்தது.

இந்தத் தாக்குதலுக்கு ஹூதிக்கள் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இதுபோன்ற தாக்குதல்கள் குறித்து அவா்கள் பல மணி நேரம் கழித்துதான் அறிக்கை விடுவது வழக்கம் என்பது நினைவுகூரத்தக்கது.

ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா்கள், காஸா போரில் ஈரானின் மற்றொரு நிழல் படையான ஹமாஸை ஆதரித்து செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திருகின்றனா். இஸ்ரேல் தொடா்புடைய கப்பல்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்துவதாக அவா்கள் கூறினாலும், பிற கப்பல்களும் குறிவைக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

சரக்குக் கப்பல்களைத் தாக்கும் ஹூதி படையினரின் திறனைக் குறைப்பதற்காக பிரிட்டனும், அமெரிக்காவும் அவா்களது நிலைகள் மீது தாக்குதல் நடத்தின. ஆனால் அதையும் மீறி கிளா்ச்சிப் படையினா் கப்பல்களை தொடா்ந்து தாக்கி வருகின்றனா்.

திருமகள் அம்மன் கோயில் நவராத்திரி பெருவிழா

ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

இன்று வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்

மாா்பக புற்றுநோய் கண்டறியும் முகாம்

விதிமுறையை பின்பற்றாத 54 தனியாா் பல்கலைக்கழகங்கள்: யுஜிசி எச்சரிக்கை

SCROLL FOR NEXT