உலகிற்கு ஒரு நல்ல செய்தி! என்ன சொல்லப்போகிறது அமெரிக்கா?
அமெரிக்கா - ஈரான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் உறுதியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா - ஈரான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் உறுதியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்காசியப் போரை முடிவுக்குக் கொண்டுவர, ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் செய்வது தொடர்பான அறிவிப்பை அமெரிக்கா இன்று வெளியிடக்கூடும் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
இந்தியாவுக்குத் முதல்முறையாக பயணம் வந்துள்ள ரூபியோ, இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் ஹோர்முஸ் நீரிணை சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,"அடுத்த சில மணி நேரங்களில், உலகிற்குச் சில நல்ல செய்திகள் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக நான் நம்புகிறேன்" எனக் கூறினார்.
மேலும், “ஒரு புதிய செயல்முறையைத் தொடங்கி வைக்கும் ஒப்பந்தமாக இது இருக்கும். அமெரிக்க அதிபர் விருப்பத்தைப் போன்று, ஈரானின் அணு ஆயுதங்களைக் கண்டு உலகம் அச்சப்படத் தேவையில்லாத நிலையை உருவாக்கும்.
இதன்மூலம், ஹோர்முஸ் நீரிணை எவ்விதக் கட்டணமும் இன்றித் திறக்கப்பட வேண்டும். ஈரான் தங்களிடமுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும். அணுசக்தி தொடர்பானப் பிரச்னைகள் தீர்க்கப்படவேண்டும்” என்று அமெரிக்காவின் நிலைப்பாட்டை ரூபியோ தெரிவித்தார்.
ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது தொடர்பான ஒப்பந்தம் பெரும்பாலும் பேசி முடிக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து ரூபியோவின் இந்தக் கருத்துகள் போர் நிறுத்தம் பற்றிய உறுதிப்பாட்டை வலுப்படுத்துகின்றன.
சர்வதேச பொருளாதாரத் தடைகளின் கீழ் முடக்கப்பட்டுள்ள ஈரானின் வெளிநாட்டு நிதியில் ஒரு பகுதியை விடுவிக்கவும், ஈரான் துறைமுகங்களுக்கு வந்து செல்லும் கப்பல்களுக்கான முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவரவும் அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக ஈரான் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.