வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் குறித்து தலைமை தேர்தல் ஆணையருக்கு தமிழக தேர்தல் ஆணையர் கடிதம் 

DIN | Published: 04th December 2018 04:22 PM

 

சென்னை: உயர் நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு, தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதிமுகவில் ஏற்பட்ட பிளவைத்த தொடர்ந்து முதல்வர் பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கை விசாரித்த அப்போதைய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் 3-வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 

மூன்றாவது நீதிபதியான சத்யநாராயணன் வழக்கை விசாரித்து 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பு வழங்கினார்.

தேர்தலை சந்திப்பதா அல்லது மேல்முறையீடு செய்வதா என்பதை சம்பந்தப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களே முடிவு செய்வார்கள் என டி.டி.வி. தினகரன் தரப்பில் கூறப்பட்டது. 

அதேசமயம் இந்திய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா கடந்த ஞாயிறு அன்று பதவியேற்றுக் கொண்டார்.  பின்னர் தமிழக சட்டப்பேரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்களா என விளக்கம் கேட்டு,  தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹுவுக்குகடிதம் எழுதினார்.

இந்நிலையில் உயர் நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு, தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

Tags : tamilnadu assembly ADMK 18MLAs disqualification sunil arora sathyaprata sahu

More from the section

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் கே.நாராயணசாமி: என்.ரங்கசாமி அறிவிப்பு
அமமுகவின் 2-ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: தேனி மக்களவைத் தொகுதியில் தங்கத் தமிழ்ச்செல்வன் போட்டி
மக்களவைத் தேர்தல்: தாக்கத்தை ஏற்படுத்துமா உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான போராட்டம்?
"பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடைபெறாது': கனிமொழி
இறந்தவர் பெயரில் மின் இணைப்பு: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்