திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

கார்ப்ரேட் நிறுவனங்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக்குகளை தமிழ்நாடு அரசு தடை செய்யாதது ஏன்?: இரா.முத்தரசன் கேள்வி 

DIN | Published: 16th December 2018 02:38 PM

 

சென்னை: கார்ப்ரேட் நிறுவனங்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக்குகளை தமிழ்நாடு அரசு தடை செய்யாதது ஏன்? என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.  

இது தொடர்பாக வர ஞாயிறன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு அரசு பிளாஸ்டிக்கு தடை விதித்துள்ளது. அரசின் தடை என்பது ஒட்டு மொத்த பிளாஸ்டிக்குக்கும் அல்ல. தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு பிளாஸ்டிக் தொழில் முனைவோர்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக்குக்கு மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது.

சிறு, குறு தொழில் முனைவோர் தயாரிக்கும் பிளாஸ்டிக்கு, மறுசூழற்சி செய்யக் கூடிய பொருள்கள் மட்டுமே தயாரிக்கின்றனர். இத்தகைய பிளாஸ்டிக்குக்குத்தான் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.

ஆனால், கார்ப்ரேட் நிறுவனங்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக்குகள் மறுசுழற்சி செய்ய முடியாதவை ஆகும். அதனை தமிழ்நாடு அரசு தடை செய்யவில்லை என்பது ஏன் என்ற கேள்வி எழுகின்றது.

சிறு,குறு தொழில் முனைவோர், வங்கி மற்றும் தனியாரிடம் கடன் பெற்றும், தங்களின் நகை மற்றும் சொத்துக்களை அடமானம் வைத்தும், அதனை விற்பனை செய்தும், இத்தொழிலில் முதலீடு செய்துள்ளனர்.

திடீர் தடை காரணமாக அவர்களின் வாழ்வுரிமை கேள்விக்குரியாகிறது. முதலீடு செய்தவர்கள் மட்டுமின்றி 5 லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களும் இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் சங்கம் சார்பில் தங்களது கோரிக்கைகள் குறித்து அரசிடம் தொடர்ந்து எடுத்துக்கூறியும் பயனளிக்காத நிலையில் டிசம்பர் 18 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளனர்.

தமிழ்நாடு அரசு இனியும் காலம் தாழ்த்தாது, பிளாஸ்டிக் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு, குறு தொழில் முனைவோர் மற்றும் அதனை நம்பியுள்ள 5 லட்ச தொழிலாளர்கள் நலன்களை கவனத்தில் கொண்டு, பிளாஸ்டிக் தடை குறித்து அரசு மறுபரிசீலனை செய்திட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில்  கேட்டுக் கொள்கிறோம். .

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : tamilnadu plastic ban small units medium units CPI state secretary mutharasan request corporates manufacturing

More from the section

அரசியலில் எனக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உண்டு: அஜித் அதிரடி அறிக்கை 
திருக்கோயில் ஊழியர்களின் உள்ளிருப்புப் போராட்டம் ஒத்திவைப்பு
எந்தப் பயமும் இல்லை என்று சொல்லும் முதல்வர் இப்படி செய்யலாமா? ஸ்டாலின் கேள்வி
சென்னை விமான நிலையத்தில் வெற்றிகரமான 85-வது முறை..! 
பேருந்து பயணத்தின் போது இனி அதற்காக நிறுத்தம் வரைக் காத்திருக்க வேண்டாம்