திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

செந்தில்பாலாஜி அரசியல்வாதி அல்ல; ஒரு வியாபாரி: அமைச்சர் கருப்பணன் தாக்கு

DIN | Published: 16th December 2018 05:18 PM


செந்தில்பாலாஜி அரசியல்வாதி அல்ல, அவர் ஒரு வியாபாரி எங்கு ஆதாயம் கிடைக்குமோ அங்கு செல்வார் என அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார். 

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் வி. செந்தில்பாலாஜி. எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது அதற்கு எதிராக வாக்களித்த தற்போதைய துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களில் ஒருவர். இதனால் டிடிவி தினகரன் அமமுகவைத் தொடங்கியபோது அதில் மாநில அமைப்புச் செயலராக, கொங்கு மண்டல பொறுப்பாளராக, கரூர் மாவட்டச் செயலராகப் பணியாற்றினார்.

இந்நிலையில் டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது ஆதரவாளர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை (டிச.14) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 

இது தொடர்பாக அமைச்சர் கருப்பணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஸ்டெர்லைட் விவகாரத்தில் கொள்கை முடிவு எடுப்பது குறித்து முதல்வர் ஆராய்ந்து முடிவெடுப்பார். செந்தில்பாலாஜி அரசியல்வாதி அல்ல, அவர் ஒரு வியாபாரி எங்கு ஆதாயம் கிடைக்குமோ அங்கு செல்வார் என்று கூறினார். 

More from the section

அரசியலில் எனக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உண்டு: அஜித் அதிரடி அறிக்கை 
திருக்கோயில் ஊழியர்களின் உள்ளிருப்புப் போராட்டம் ஒத்திவைப்பு
எந்தப் பயமும் இல்லை என்று சொல்லும் முதல்வர் இப்படி செய்யலாமா? ஸ்டாலின் கேள்வி
சென்னை விமான நிலையத்தில் வெற்றிகரமான 85-வது முறை..! 
பேருந்து பயணத்தின் போது இனி அதற்காக நிறுத்தம் வரைக் காத்திருக்க வேண்டாம்