திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

மசூலிப்பட்டினம் -காக்கி நாடா இடையே நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் 'பெய்ட்டி' புயல் 

DIN | Published: 16th December 2018 02:56 PM

 

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் 'பெய்ட்டி' புயலானது, மசூலிப்பட்டினம் -காக்கி நாடா இடையே திங்கள் பிற்பகல் கரையைக் கடக்கும்  என்று வானிலைஆய்வுமையம் தெரிவித்துள்ளது.   

இதுதொடர்பாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவல் பின்வருமாறு: 

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது,  புயலாக உருமாறியுள்ளது. 'பெய்ட்டி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயலானது, தற்போது சென்னையில்  இருந்து 510 கி.மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. 
 
சரியாக மசூலிப்பட்டினத்தில் இருந்து தென் கிழக்கே 670 கி.மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ள 'பெய்ட்டி' புயலானது, மசூலிப்பட்டினம் - காக்கி நாடா இடையே திங்கள் பிற்பகல் கரையக் கடக்கும். 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.  

Tags : bay of bengal cyclone baity masoolipattinam kaki nada andhra coastal region wind rain

More from the section

அரசியலில் எனக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உண்டு: அஜித் அதிரடி அறிக்கை 
திருக்கோயில் ஊழியர்களின் உள்ளிருப்புப் போராட்டம் ஒத்திவைப்பு
எந்தப் பயமும் இல்லை என்று சொல்லும் முதல்வர் இப்படி செய்யலாமா? ஸ்டாலின் கேள்வி
சென்னை விமான நிலையத்தில் வெற்றிகரமான 85-வது முறை..! 
பேருந்து பயணத்தின் போது இனி அதற்காக நிறுத்தம் வரைக் காத்திருக்க வேண்டாம்