புதன்கிழமை 16 ஜனவரி 2019

குரூப் 2 பணியிடங்கள்: விண்ணப்பிக்க செப்.9 கடைசி

DIN | Published: 04th September 2018 02:23 AM

குரூப் 2 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 9 -ஆம் தேதி கடைசியாகும். 
சமூக பாதுகாப்புத் துறை, உதவி தொழிலாளர் நலத் துறை அதிகாரி, சார் -பதிவாளர் உள்ளிட்ட குரூப் 2 தொகுதியில் 1,199 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த மாதம் 10 -ஆம் தேதி வெளியிட்டது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 9 -ஆம் தேதி கடைசி நாளாகும். இதன்பின், இந்தியன் வங்கி அல்லது பாரத ஸ்டேட் வங்கி மூலமாக விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வரும் 11 -ஆம் தேதி கடைசியாகும். குரூப் 2 -க்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு நவம்பர் 11 -ஆம் தேதி நடைபெறவுள்ளது.
 

More from the section

சேலத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபம்: முதல்வர் திறந்துவைத்தார்
கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து மீண்டும் தொடக்கம்
காணும் பொங்கல்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
காணும் பொங்கலைக் கொண்டாட திட்டமிடும் சென்னைவாசிகளே.. கவனிக்க!
4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும்: சென்னை வானிலை ஆய்வு மையம்