24 பிப்ரவரி 2019

டி.என்.பி.எஸ்.சி.: ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கு 12-ஆம் தேதி முதல் சான்றிதழ் பதிவேற்றம்

DIN | Published: 05th September 2018 01:17 AM


ஒருங்கிணைந்த பொறியியல் காலி பணியிடங்களுக்கு நடந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் வரும் 12-ஆம் தேதி முதல் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டுமென டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பணிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. அதில் 44 ஆயிரத்து 524 தேர்வர்கள் பங்கேற்றனர். எழுத்துத் தேர்வில் பங்கேற்றோரில் 665 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் www.tnpsc.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 12 முதல் 25-ஆம் தேதி வரை மூலச் சான்றிதழ்களைத் தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இணைய சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்யலாம்.

More from the section

விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் அளிக்கும் திட்டம்: முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
அதிமுக எம்.பி. ராஜேந்திரன் கார் விபத்தில் பலி
திருவள்ளூர் அருகே களைகட்டிய சேவல் போட்டி: 1,000 சேவல்கள் பங்கேற்பு
கஜா புயல்: நூறு நாட்களைக் கடந்த பிறகும் மீளாமல் தவிக்கும் விவசாயிகள், மீனவர்கள்
அதிமுக-பாமக கூட்டணி: மக்களால் புறக்கணிக்கப்படும்