புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

என் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் அரசியலை விட்டு விலகத் தயார்: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

DIN | Published: 11th September 2018 01:41 PM

தன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் அரசியலை விட்டு விலகத் தயார் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
உள்ளாட்சித் துறையின் விதிகளை மீறி யாருக்கும் டெண்டர் அளிக்கப்படவில்லை. உலக நாடுகளின் பணக்காரர்கள் பட்டியலில் ஸ்டாலின் குடும்பத்தினர் உள்ளனர். 

என் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயார். அரசியலை விட்டும் விலகத் தயார். குற்றச்சாட்டுகளை நிரூபிக்காவிட்டால் திமுக தலைவர் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்வாரா?. முதல்வர், துணை முதல்வரை தொடர்ந்து அமைச்சர்கள் ஒவ்வொருவரின் மீதும் திமுக குற்றஞ்சாட்டி வருகிறது. 

அதிமுகவை முடக்க ஸ்டாலின் மேற்கொள்ளும் முயற்சிகள் என்றும் பலிக்காது. தமிழக உள்ளாட்சித்துறை சிறப்பாக செயல்படுவதாக மத்திய அரசு விருது வழங்கி பாராட்டுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 
 

 

More from the section

முகிலனைக் கண்டுபிடித்து மக்கள் முன் வெளிப்படுத்த வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்  
அதிமுக முரண்டுபிடிக்கும் அளவுக்கு அப்படி எத்தனைத் தொகுதிகளைத்தான் கேட்கிறது தேமுதிக?
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி போராட்டம்!
தமிழகத்தில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இந்தாண்டே நடத்தப்படும்: பள்ளிக்கல்வித்துறை
அதிமுக-பாஜக கூட்டணியால் மக்களுக்குத்தான் லாபம்: மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை