20 ஜனவரி 2019

ராஜீவ் வழக்கு: 7 பேரின் விடுதலை ஆவணங்கள் ஆளுநரிடம் ஒப்படைப்பு

DIN | Published: 11th September 2018 07:53 PM

 

ராஜீவ் வழக்கில் தொடர்புடைய 7 பேரின் விடுதலை தொடர்பான ஆவணங்களை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் தமிழக அரசு செவ்வாய்கிழமை வழங்கியது.

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க, ஆளுநரின் ஆலோசனையுடன் தமிழக அரசு உரிய முடிவு எடுத்துக் கொள்ளலாம் என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. 

இதன்படி, ஞாயிற்றுக்கிழமை மாலை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் இந்த 7 பேரையும் விடுவிக்க தீர்மானிக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த 7 பேரையும் விடுவிப்பது தொடர்பான சட்டப்பூர்வ ஆவணங்களை தமிழக அரசு  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் வழங்கியது. 

More from the section

ஒவ்வொரு மாநிலத்திலும் சூழல் வேறுபடுகிறது: ராகுல் பிரதமர் வேட்பாளர் குறித்து ஸ்டாலின் கருத்து
பொங்கல் பரிசு தந்ததற்காக எங்கள் மீது வீண் பழி: முதல்வர் பழனிசாமி
தமிழகம் முழுவதும் ஒரே கல்விமுறை அமல்: அமைச்சர் செங்கோட்டையன்
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
விராலிமலை ஜல்லிக்கட்டு: 2 ஆயிரம் காளைகள் பங்கேற்கும் சாதனை நிகழ்வு!