வியாழக்கிழமை 17 ஜனவரி 2019

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான தமிழக அரசின் கெடுபிடிகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது: ஹெச். ராஜா

DIN | Published: 11th September 2018 01:04 PM

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான தமிழக அரசின் கெடுபிடிகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். 

விநாயகர் சதுர்த்திக்கு சிலைகளை வைத்து வழிபடுவது தொடர்பாக தமிழக அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்து அரசாணை பிறப்பித்தது. தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 

இதனிடையே விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான தமிழக அரசின் கெடுபிடிகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். 

மத நிகழ்ச்சிகளுக்கு எந்த கட்டுப்பாடும் அரசு விதிக்க முடியாது என்றும் இந்துக்கள் வீதிக்கு வந்து நம் உரிமைகளை நிலைநாட்ட வேண்டிய நேரமிது என்றும் அவர் தனது டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். 
 

More from the section

பாலமேடு ஜல்லிக்கட்டு: சீறிப் பாய்ந்த காளைகள்; அடக்க முயன்ற 48 வீரர்கள் காயம்
ஜல்லிக்கட்டு : அவனியாபுரத்தில் 47 பேர் காயம்
ஜல்லிக்கட்டு: பெரியசூரியூரில் 40 பேர் காயம்
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பொங்கல் விழா: 108 கோ பூஜை; மகா நந்திக்கு ஒரு டன் காய்கனி, மலர்களால் அலங்காரம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்