சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி:  திமுக தலைவர்

DIN | Published: 12th September 2018 01:38 AM


தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதிக்குள்ளாவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை, மதுரை மட்டுமல்லாமல் கிராமப்புறங்களிலும் கூட மின்வெட்டு செய்யப்படுவதுடன், விவசாயிகள் தங்களுக்கு தேவையான மின்சாரம் கிடைக்காமல் தவிக்கும் நிலை உள்ளது. 
தமிழகத்துக்குத் தேவைப்படும் 13,260 மெகாவாட் மின்சாரத்தில் இப்போது 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரம்தான் கிடைக்கிறது. சுமார் 3,260 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையினால் மின் பகிர்மானக் கழகம் முச்சந்தியில் வந்து நிற்கிறது. இந்த பற்றாக்குறையைப் போக்க 1,600 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது என்றாலும், இன்னும் 1500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையில் மின் பகிர்மானக்கழகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
மின் பகிர்மானக் கழகத்தில் அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டுள்ள வரலாறு காணாத நிதி நெருக்கடியால், பராமரிப்பு செலவுகளுக்குப் பணமில்லாமல் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. மின் பகிர்மான கழகத்துக்குத் தேவையான கேபிள்கள்கூட வாங்க இயலாமல் தவிக்கும் நிலை உள்ளது. 
இந்த நிலையில் மின் உற்பத்தி குறித்து மின்துறை அமைச்சர் ஆய்வு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்தாலும், உண்மை என்னவென்றால் ஒரு அறிவிக்கப்படாத மின் வெட்டு தமிழகத்தில் அமல்படுத்தப்படுகிறது என்றும், அதற்கு முன்னோட்டமாகத்தான் இந்த அதிகாரிகள் கூட்டத்தை மின் துறை அமைச்சர் தங்கமணி கூட்டியிருக்கிறார் என்பதும், வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
பராமரிப்புப் பணி என்ற போர்வையிலும் மக்களையும், விவசாயிகளையும், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களையும் கடும் பாதிப்புக்குள்ளாக்கும் அறிவிக்கப்படாத மின் வெட்டுகளை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

More from the section

ரஃபேல் தீர்ப்பு: பிப்ரவரி 26-இல் மறுஆய்வு மனுக்கள் மீது விசாரணை
பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு 
திமுக தலைமைக்கு ஒரு வேண்டுகோள்!
அமித் ஷாவுடன் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் சந்திப்பு