புதன்கிழமை 16 ஜனவரி 2019

குட்கா ஊழல்: கிடங்குக்குக் கொண்டு சென்று மாதவராவிடம் விசாரணை நடத்தும் சிபிஐ அதிகாரிகள்

DIN | Published: 12th September 2018 12:45 PM


சென்னை: குட்கா ஊழலில் கைது செய்யப்பட்ட மாதவராவை, சிபிஐ அதிகாரிகள் இன்று செங்குன்றத்தில் உள்ள கிடங்குக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

குட்கா ஊழல் வழக்கில், மாதவரத்தில் உள்ள குட்கா கிடங்கின் உரிமையாளர்கள் மாதவராவ் உட்பட 5 பேரை கைது செய்த சிபிஐ, 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.

வெள்ளிக்கிழமையுடன் இவர்களது போலீஸ் காவல் முடிவடையும் நிலையில், மாதவராவை, இன்று செங்குன்றம் அழைத்துச் சென்றுள்ள சிபிஐ அதிகாரிகள், குட்கா பறிமுதல் செய்யப்பட்ட கிடங்கில் முக்கிய ஆதாரங்களைத் திரட்டவும், விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
 

More from the section

4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும்: சென்னை வானிலை ஆய்வு மையம்
நம்ம முதல்வர் எப்படி பொங்கல் கொண்டாடினார் என்று பார்க்கலாம் வாருங்கள்!
மோடி அலை ஓய்ந்துவிட்டது: சு.திருநாவுக்கரசர் 
துரோகத்தின் கூடாரமாக கோடநாடு மாறி வருகிறது: கமல் 
விவசாயிகள் நிறைந்த கட்சியாக மக்கள் நீதி மய்யம் இருக்கும்: கமல்ஹாசன்