வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

சமூக பாதுகாப்புத் துறை பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

DIN | Published: 12th September 2018 02:31 AM


சமூக பாதுகாப்புத் துறையில் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
சமூக பாதுகாப்புத் துறையின் மூலம் மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் கணக்கு அலுவலர், கணக்கு உதவியாளர் பணியிடங்களில் தலா ஒரு இடத்துக்கு விண்ணப்பிக்கலாம். www.tn.gov.in/department/30,  www.tn.gov.in/job_opportunity , www.socialdefence.tn.gov.in ஆகிய இணையதளங்களில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த விண்ணப்பங்களை வரும் 20 -ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள், ஆணையாளர் -செயலாளர், மாநில குழந்தைகள் பாதுகாப்புச் சங்கம், சமூக பாதுகாப்புத் துறை, 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை-10'' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from the section

ரஃபேல் தீர்ப்பு: பிப்ரவரி 26-இல் மறுஆய்வு மனுக்கள் மீது விசாரணை
பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு 
திமுக தலைமைக்கு ஒரு வேண்டுகோள்!
அமித் ஷாவுடன் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் சந்திப்பு