24 பிப்ரவரி 2019

தமிழகம், புதுச்சேரியில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

DIN | Published: 12th September 2018 01:29 AM


வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் புதன்கிழமை (செப். 12) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் புதன்கிழமை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், தமிழகம், புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் சனிக்கிழமை வரை (செப். 15) இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
கோவில்பட்டியில் 80 மி.மீ. மழை: செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 80 மி.மீ. மழையும், சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் 70 மி.மீ., கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி, திருச்சி மாவட்டம் முசிறி, திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் தலா 50 மி.மீ., ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தலா 40 மி.மீ., விருதுநகர் மாவட்டம் சாத்தூர், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், சேலம் மாவட்டம் மேட்டூர், ஓமலூர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் தலா 30 மி.மீ. மழையும் பதிவானது. மேலும், தமிழகத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 100 டிகிரி வெயில் செவ்வாய்க்கிழமை பதிவானது.
 

More from the section

டாப்சிலிப், முதுமலையில் யானைகளுக்குப் புத்துணர்வு முகாம் தொடக்கம்
அதிமுகவை பணிய வைத்தே பாஜக கூட்டணி அமைத்துள்ளது: முதல்வர் நாராயணசாமி
தேர்தல் கூட்டணிக்காக பாமக ஒருபோதும் கொள்கையை விட்டுக் கொடுத்ததில்லை: ராமதாஸ்
ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்க வீரசபதம் ஏற்போம்: டிடிவி தினகரன் கடிதம்
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவா?: அமைச்சர் டி.ஜெயக்குமார்