24 பிப்ரவரி 2019

பெட்ரோல் விலை: செப்.14 -இல் தமாகா போராட்டம்

DIN | Published: 12th September 2018 01:36 AM


பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் செப்டம்பர் 14 -ஆம் தேதி, சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக அந்தக் கட்சியின் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை அடைந்துள்ளது. இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல் விலையைக் குறைக்க வலியுறுத்தி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஜி.கே.வாசன் தலைமையில் செப்டம்பர் 14 -ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

More from the section

கூண்டில் சிக்கியது சிறுத்தை
7 பேர் விடுதலைக்கான மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கேற்போம்: இந்திய கம்யூனிஸ்ட்
தேவாரம், திருவாசகத்துக்கு இசை வடிவம்: முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்
விடுதலைக்கு உதவ முதல்வருக்கு நளினி கடிதம்
5 பேர் சிறைபிடிப்பு: பாம்பன் மீனவர்கள் வேலைநிறுத்தம்