வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கும் காலம் தாழ்த்தாமல் நல்ல தீர்ப்பு தரவேண்டும் - விஜயகாந்த்

DIN | Published: 12th September 2018 10:34 AM
கோப்புப்படம்

 

பேரறிவாளன் உட்பட 7 பேரையும் இன்னும் காலம் தாழ்த்தி அரசியல் நடத்தாமல், அவர்களுக்கு நல்ல தீர்ப்பு தரவேண்டும் என்று தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார். 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக சிறைத்தண்டனை பெற்று வரும்  பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசே முடிவு எடுத்து ஆளுநரிடம் பரிந்துரைக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது. 

இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடிய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வதாக முடிவு எடுத்து ஆளுநரின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. 

இந்நிலையில், இந்த 7 பேரின் விடுதலை தொடர்பாக தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அறிக்கையில், 

"முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டதை என்றைக்கும், யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. ஆனாலும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகாலமாக சிறைதண்டனையை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் இன்னும் காலம் தாழ்த்தி அரசியல் நடத்தாமல், அவர்களுக்கு நல்ல தீர்ப்பு தரவேண்டும். 

ஏனென்றால் அவர்கள் பல ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்ததை கருத்தில் கொண்டு மத்திய அரசும், மாநில அரசும், ஆளுநரும் இந்த பிரச்சனையில் தலையிட்டு உடனடியாக எழுபேரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளுகின்றேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : vijaykanth rajiv gandhidead case perarivalan rajiv gandhi

More from the section

பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு ஆங்கில மொழி பயிற்சி: பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழக அரசு ஒப்பந்தம்
அதிமுக யாருடன் கூட்டணி வைத்தாலும் திமுகவை தோற்கடிக்க முடியாது: மு.க.ஸ்டாலின்
கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்: பொன்.ராதாகிருஷ்ணன்
எண்ணிக்கையால் மட்டுமே வலுவான கூட்டணி உருவாகிவிடாது: கனிமொழி 
தொடர்கிறது ஆளுநர் - முதல்வர் பனிப்போர்!