சனிக்கிழமை 19 ஜனவரி 2019

வீணை இசைக் கலைஞர் ஜெயந்தி குமரேஷுக்கு இந்திரா சிவசைலம் விருது

DIN | Published: 12th September 2018 02:40 AM
இந்திரா சிவசைலம் அறக்கொடை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வீணை இசைக் கலைஞர் டாக்டர் ஜெயந்தி குமரேஷ்.


இந்திரா சிவசைலம் அறக்கட்டளையின் 9-ஆவது ஆண்டுக்கான விருதுக்கு வீணை இசைக் கலைஞர் டாக்டர் ஜெயந்தி குமரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாதெமியின் அறக்கொடைக் குழு உறுப்பினர்கள் மற்றும் டாஃபே நிறுவனத்தின் தலைவர் மற்றும் செயல் அலுவலரான மல்லிகா ஸ்ரீனிவாசன் உள்ளடக்கிய குழுவால் இந்திரா சிவசைலம் விருதுக்கு ஆண்டுதோறும் சிறந்த இசைக் கலைஞர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 
2018-ஆம் ஆண்டுக்கான இந்த விருது வீணை இசைக் கலைஞர் டாக்டர் ஜெயந்தி குமரேஷுக்கு வழங்கப்பட உள்ளது. 
இந்த விருது வரும் அக்டோபர் 12-ஆம் தேதி மியூசிக் அகாதெமியில் நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கப்படும் என அறக்கட்டளைச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

More from the section

கேக்குறவன் கேனப்பயலா இருந்தா இதுவும் சொல்வார்கள்: கொடநாடு விடியோ குறித்து முதல்வர்
தொழிற்சாலைகளை விரிவாக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல்?
ஆட்சி அஸ்தமனம் ஆகும் நேரத்தில் முற்பட்டோருக்கு இடஒதுக்கீடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
சயன், மனோஜ்-க்கு ஜாமீன்: எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
குழந்தைகளை குறிவைக்கும் சிகரெட் நிறுவனங்கள்: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு