17 பிப்ரவரி 2019

எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு தடை: அரசாணை வெளியீடு

DIN | Published: 13th September 2018 04:32 AM


எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு புதன்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளது.
பேட்டரி மூலம் செயல்படும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கப்படும்' என்று சட்டப்பேரவையில் ஜூன் 14 -ஆம் தேதி தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அறிவித்தார். இதையடுத்து, செப்டம்பர் மாதம் முதல் இந்தத் தடை அமலுக்கு வரும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு புதன்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், காவல், கல்வி மற்றும் சுகாதாரத் துறையைச் சேர்ந்த 68,000 -க்கும் மேற்பட்டோருக்கு புகையிலை தொடர்புடைய பொருள்களை ஒழிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : electronic cigarettes. e-cigarettes banned Tamil Nadu government

More from the section

பிரச்னைக்கு தீர்வு காணும் எண்ணம் உங்களுக்கு இல்லை: ஆளுநருக்கு முதல்வர் நாராயணசாமி பதில் 
அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு 'புள்ளி ராஜா' பட்டம்: ஓபிஎஸ் நகைச்சுவை பேச்சு 
பேச்சுவார்த்தைக்காக முதல்வர் நாராயணசாமி விதித்த நிபந்தனையை ஏற்கமுடியாது: ஆளுநர் கிரண் பேடி 
சுப்பிரமணியன் குடும்பத்துக்கு கிருஷ்ணசாமி ரூ.20,000 நிதியுதவி
சிவசந்திரனுக்கு நினைவுச் சின்னம், சிலை அமைக்க வேண்டும்: வைகோ