வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

காந்தியின் 150-ஆவது பிறந்த நாள்: பள்ளிகளில் போட்டிகள் நடத்த உத்தரவு

DIN | Published: 13th September 2018 02:40 AM

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காந்திய சிந்தனைகள் தொடர்பான போட்டிகளை நடத்துமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாள் விழாவை மிகச் சிறப்பாக மாவட்ட, மாநில, தேசிய அளவில் கொண்டாடும் வகையில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாவட்ட அளவிலான பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகளை நடத்த வேண்டும். மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு, வாழ்க்கை தத்துவம், குறிக்கோள், காந்திய சிந்தனைகளான உண்மை, அமைதி, அஹிம்சை, தூய்மை போன்ற நெறிகளை உள்ளடக்கிய மேடை நாடகத்தை அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் செப்.17-ஆம் தேதி முதல் செப். 20-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும். இதில் பெரும்பாலான மாணவர்கள் பங்கேற்கும் வகையில் பள்ளி வேலை நேரத்திலேயே போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

 

More from the section

ரஃபேல் தீர்ப்பு: பிப்ரவரி 26-இல் மறுஆய்வு மனுக்கள் மீது விசாரணை
பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு 
திமுக தலைமைக்கு ஒரு வேண்டுகோள்!
அமித் ஷாவுடன் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் சந்திப்பு