வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

சர்வதேச தரத்தில் ஏழைகளுக்கும் மருத்துவம்: டாக்டர் முகமது ரேலா

DIN | Published: 13th September 2018 02:41 AM
குரோம்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்ற டாக்டர் ரேலா இன்ஸ்டிட்யூட் மற்றும் மெடிக்கல் சயின்ஸ் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைத் திறப்பு விழாவில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர்.


ஏழை, நடுத்தர மக்களுக்கு சர்வதேசத் தரம் மிகுந்த மருத்துவ சேவை அளிக்கும் வகையில் பணியாற்றுவேன் என்று டாக்டர் ரேலா இன்ஸ்டிட்யூட், மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையின் தலைவரும் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மருத்துவருமான முகமது ரேலா தெரிவித்தார்.
குரோம்பேட்டையில் டாக்டர் ரேலா இன்டிஸ்டியூட், மெடிக்கல் சயின்ஸ் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. திமுக தலைவரும் சட்டப் பேரவை எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் மருத்துவமனையைத் திறந்து வைத்தார். டாக்டர் முகமது ரேலா செய்தியாளர்களிடம் கூறியது: சர்வதேசத் தரமிக்க மருத்துவ சேவை அளிக்க அமைக்கப்பட்ட பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் 450 படுக்கைகள், 130 தீவிர கண்காணிப்பு சிகிச்சைப் பிரிவு படுக்கைகள், 14 அறுவைச் சிகிச்சை அரங்குகள் உள்ளன. ஒரே நேரத்தில் 40 நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்க முடியும்.
இங்கு எம்.ஆர்.ஐ, சி.டி. ஸ்கேன், பெட் ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து நவீன மருத்துவக் கருவிகள், சாதனங்கள், உபகரணங்கள் உள்ளன.
கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் உள்ளிட்ட பல்வகை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வசதிகளும் உள்ளன என்றார் அவர்.
பங்கேற்றோர்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலர் வைகோ, முன்னாள் அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி, அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி, டாக்டர் சேஷையா, தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம், முன்னாள் எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

 

More from the section

ரஃபேல் தீர்ப்பு: பிப்ரவரி 26-இல் மறுஆய்வு மனுக்கள் மீது விசாரணை
பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு 
திமுக தலைமைக்கு ஒரு வேண்டுகோள்!
அமித் ஷாவுடன் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் சந்திப்பு