புதன்கிழமை 16 ஜனவரி 2019

தமிழகத்தில் மின்வெட்டு இல்லை: மின்துறை அமைச்சர் பி.தங்கமணி

DIN | Published: 13th September 2018 01:28 AM


தமிழகத்தில் மின்வெட்டு இல்லை, பொதுமக்கள் வதந்திகளை நம்பவேண்டாம் என மாநில மின்துறை அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் அமைச்சர் தங்கமணி புதன்கிழமை நிருபர்களிடம் கூறியது:
தமிழகத்தில் செப்டம்பர் மாதத்தின் மின் தேவை சுமார் 14,500 மெகாவாட். இந்த மின் தேவை அனல் மற்றும் புனல், சூரிய சக்தி, காற்றாலை மின்சாரம், மத்திய மின் தொகுப்பு ஒதுக்கீடு, நீண்ட, நடுத்தர மற்றும் குறுகியகால மின் கொள்முதல் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.
மத்திய தொகுப்பில் இருந்து 6,153 மெகாவாட்டிற்கு பதில் 3,335 மெகாவாட் மட்டுமே தற்போது கிடைக்கிறது. காற்றாலையில் இருந்து வர வேண்டிய 3000 மெகாவாட் மின்சாரமும் சரியாக வரவில்லை. இதனால் ஓரிரு இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
பராமரிப்புப் பணி எனக் கூறி கடந்த 3 மாதங்களாக கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து கடந்த 3 மாதமாக ஒரு மெகாவாட் மின்சாரம் கூட தமிழகத்துக்குத் தரப்படவில்லை.
மின்சார பற்றாக்குறை இருப்பினும், வெளி சந்தை, நீர் மற்றும் அனல் மின் உற்பத்தி மூலம் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த இடையூறு என்பது எதிர்பாராத தற்காலிக மின்தடையே.
அதேவேளையில் பராமரிப்புப் பணி என்பது எப்பொழுதும் வழக்கத்தில் உள்ள ஒரு நிகழ்வுதான். அதைக் காரணமாக வைத்து மின்வெட்டு ஏதும் செய்யப்படவில்லை.
அனல்மின் நிலையங்களில் உடனடியாக கூடுதலாக மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாது. ஆனாலும் தமிழகத்தில் நிச்சயமாக மின்வெட்டு இல்லை. எந்த காலத்திலும் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படாது. மின்துறையில் ஊழல் என்றால் எந்த விசாரணையையும் சந்திக்க தயாராக உள்ளோம். மின்சாரத்துறையில் எந்தவித அரசியல் தலையீடும் இல்லாமல் பணியிட மாறுதல் நடக்கிறது என்றார் அமைச்சர் பி.தங்கமணி.

 

More from the section

காணும் பொங்கலைக் கொண்டாட திட்டமிடும் சென்னைவாசிகளே.. கவனிக்க!
4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும்: சென்னை வானிலை ஆய்வு மையம்
நம்ம முதல்வர் எப்படி பொங்கல் கொண்டாடினார் என்று பார்க்கலாம் வாருங்கள்!
மோடி அலை ஓய்ந்துவிட்டது: சு.திருநாவுக்கரசர் 
துரோகத்தின் கூடாரமாக கோடநாடு மாறி வருகிறது: கமல்