வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

கஜாவால் சேதமடைந்த மீன்பிடி படகுகள்: சீரமைக்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு 

DIN | Published: 10th February 2019 12:28 PM

 

சென்னை: கஜா புயலால் சேதமடைந்த மீன்பிடி படகுகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த வருடம் நவம்பர் 16ந்தேதி கஜா புயல் தமிழகத்தின் 12 கடலோர மாவட்டங்களை புரட்டி போட்டது.  இதில் திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை மற்றும் நாகை உள்ளிட்டவை அதிக பாதிப்படைந்தன.

புயலின் கோர தாண்டவத்தின் காரணமாக லட்சக்கணக்கான தென்னை, பலா மற்றும் பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்தன.  வாழை, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களும் பாதிப்புக்குளாகின. லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. கடலோர பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் மீன்பிடி படகுகள் சேதமடைந்தன.

இந்நிலையில் கஜா புயலால் சேதமடைந்த மீன்பிடி படகுகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த நீதியானது படகுகளை சீரமைத்தல், புதிய மீன்பிடி வலைகளை வா ங்குதல் உள்ளிட்ட பணிகளுக்கானது என்று தமிழக அரசு உத்தரவில் தெரிவித்துள்ளது. பைபர் படகுகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்குவது என்ற முடிவின்படி, 1,051 படகுகளுக்கு அரசாணையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிதியானது புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை  பகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

Tags : tamilnadu cyclone kaja damage fishing boats reconstruction grant GO

More from the section

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் கே.நாராயணசாமி: என்.ரங்கசாமி அறிவிப்பு
அமமுகவின் 2-ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: தேனி மக்களவைத் தொகுதியில் தங்கத் தமிழ்ச்செல்வன் போட்டி
மக்களவைத் தேர்தல்: தாக்கத்தை ஏற்படுத்துமா உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான போராட்டம்?
"பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடைபெறாது': கனிமொழி
இறந்தவர் பெயரில் மின் இணைப்பு: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்