சனிக்கிழமை 23 மார்ச் 2019

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு: ஓபிஎஸ் அறிவிப்பு 

DIN | Published: 19th February 2019 05:06 PM

 

சென்னை; வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சென்னை அடையாறில் உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலில் பேச்சுவார்தை நடந்து வந்தது.

ஏறத்தாழ இரண்டு மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

அத்துடன் நடைபெறவுள்ள 21 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

முன்னதாக நடைபெற்ற பேச்சுவார்தையின் போது பாமகவுக்கு எழு தொகுதிகள் மற்றுமொரு  மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  

Tags : tamilnadu parliment elections alliance ADMK BJP pact agreement EPS OPS

More from the section

நேர்மையான அரசியலை முன்னெடுக்க விரும்புகிறேன்: தமிழிசை செளந்தரராஜன்
ஏழை பெண்கள் திருமணத்துக்கு இலவச வீட்டு உபயோக பொருள்கள்: அமமுக தேர்தல் அறிக்கை
அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு
அமமுக 2-ஆவது வேட்பாளர்கள் பட்டியல்: மக்களவைத் தேர்தலில் 3 முன்னாள் அமைச்சர்கள்
முன்னாள் எம்.பி. கலியபெருமாள் மறைவு