சனிக்கிழமை 23 மார்ச் 2019

அமித் ஷாவுடன் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் சந்திப்பு

DIN | Published: 22nd February 2019 04:25 PM


அதிமுக - பாஜக கூட்டணியில் தேமுதிக இணைவது தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் இருக்கும் நிலையில், தமிழகம் வந்திருக்கும் அமித் ஷாவை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் சந்தித்துள்ளார்.

முன்னதாக இன்று முற்பகலில் மதுரை விமான நிலையம் வந்த அமித் ஷாவுடன் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதற்கிடையே, தேமுதிக தலைவர் விஜயகாந்தை, திமுக தலைவர் ஸ்டாலின் முதல் முறையாக அவரது இல்லத்துக்கே நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்த சந்திப்பினால், அதிமுக - பாஜக கூட்டணியில் தேமுதிக இணையுமா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. விஜயகாந்த் - ஸ்டாலின் இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து, மதுரை விமான நிலையம் வந்த அமித் ஷாவுடன், ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். சந்திப்பின்போது தங்கமணி, வேலுமணி, தமிழிசை உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம், மரியாதை நிமித்தமாகவே அமித் ஷாவுடனான சந்திப்பு நிகழ்ந்தது என்றும், ஓரிரு நாட்களில் கூட்டணி குறித்து (தேமுதிக) அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார்.

விஜயகாந்துடன் ஸ்டாலின் சந்திப்பு குறித்து கேட்டதற்கு, உடல் நலனை விசாரிக்கவே விஜயகாந்தை சந்தித்ததாக ஸ்டாலினே கூறியுள்ளாரே என்று பதிலளித்தார்.
 

More from the section

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் மகனுக்கு தொடர்புண்டு: உதயநிதி ஸ்டாலின்
திமுகவினர் விஞ்ஞான மூளை படைத்தவா்கள்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு
கடந்த 10 ஆண்டுகளில் வனப்பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்துகள் எத்தனை? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி
சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்: சு.திருநாவுக்கரசர்
ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார்: சத்யபிரதா சாஹூ