சனிக்கிழமை 23 மார்ச் 2019

இனி மாற்றம், முன்னேற்றம் வராது; மாற்றம், ஏமாற்றம், சூட்கேஸ் மட்டுமே வரும்: ஸ்டாலின் விமர்சனம்

DIN | Published: 22nd February 2019 10:53 AM


கடல் தாண்டி ஊழல் செய்யும் கட்சியாக அதிமுக உள்ளது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். 

 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. பாமகவை பொறுத்தவரை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. இதுதொடர்பாக இருதரப்பு பேச்சுவார்த்தையில் பாமகவுக்கு 7 தொகுதிகளுடன் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அதிமுக-பாமக கூட்டணியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவையும், முதல்வரையும் விமர்சித்து விட்டு பாமக - அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. இனி மாற்றம், முன்னேற்றம் வராது; மாற்றம், ஏமாற்றம், சூட்கேஸ் மட்டுமே வரும். 

கடல் தாண்டி ஊழல் செய்யும் கட்சியாக அதிமுக உள்ளது என ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

அதிமுகவை விமர்சித்து மேடையில் பேசிவிட்டோ, அறிக்கை விட்டு விட்டோ போகவில்லை. ‘கழகத்தின் கதை’ என்ற தலைப்பில் புத்தகமே போட்டிருக்கிறார். அந்தப் புத்தகத்தை போட்ட பெரிய மனுஷன் தான் இன்றைக்கு ஊழல்வாதிகளிடம் கூட உட்கார்ந்துகொண்டு கையெழுத்து போட்டுள்ளார். வெட்கம் இல்லை? சூடு இல்லை? சொரணை இல்லை? நான் கேட்கிறேன் என்று விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

More from the section

கள்ளக்குறிச்சியில் சுதீஷ் வேட்புமனு தாக்கல்
சிலை திருட்டு வழக்கு டி.எஸ்.பி. காதர் பாட்சா கைது
கன்னியாகுமரியில்  பொன்.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்
தமாகா தேர்தல் பணிக்குழு அமைப்பு
புதுச்சேரி: வைத்திலிங்கம் வேட்புமனு தாக்கல்