சனிக்கிழமை 23 மார்ச் 2019

உடல் நலம் விசாரிக்க தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

DIN | Published: 22nd February 2019 11:35 AM


சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்துக்கு வருகை தந்த நடிகர் ரஜினிகாந்த், அவரை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்துக்கு இன்று முற்பகல் 11.30 மணிக்கு நடிகர் ரஜினிகாந்த் வந்தார்.

அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் விஜயகாந்தை இன்று ரஜினிகாந்த் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். 

தேமுதிகவுடன் அதிமுகவும், மறுபக்கம் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ரஜினிகாந்தின் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

நேற்று  தமிழகக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் விஜயகாந்தை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.
 

More from the section

கள்ளக்குறிச்சியில் சுதீஷ் வேட்புமனு தாக்கல்
சிலை திருட்டு வழக்கு டி.எஸ்.பி. காதர் பாட்சா கைது
கன்னியாகுமரியில்  பொன்.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்
தமாகா தேர்தல் பணிக்குழு அமைப்பு
புதுச்சேரி: வைத்திலிங்கம் வேட்புமனு தாக்கல்