புதன்கிழமை 20 மார்ச் 2019

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு 

DIN | Published: 22nd February 2019 08:15 PM

 

சென்னை: நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட் காட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

கடந்த புதன்கிழமையன்று திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது. வியாழனை அன்று மனிதநேய மக்கள் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தொடர்ச்சியாக வெள்ளியன்று மதிமுக மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதி எண்ணிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்நிலையில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான ஒப்பந்தத்தில் வெள்ளி மாலை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரான பேராசிரியர் காதர் மொஹிதீனும் கையெழுத்திட்டனர்.

Tags : tamilnadu lok sabah elections DMK alliance IUML kadar mohaideen pact

More from the section

ஒரு கோடி சாலைப் பணியாளர்கள்: திமுக தேர்தல் அறிக்கை
ஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500: அதிமுக தேர்தல் அறிக்கை
பிளஸ் 2 பொதுத் தேர்வு நிறைவு: ஏப்.19-இல் தேர்வு முடிவுகள்
முதல் நாளில் 22 பேர் வேட்பு மனு தாக்கல்
கொத்தடிமை தொழிலாளர் மீட்புப் பணி: வாகனம் வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி