சனிக்கிழமை 23 மார்ச் 2019

நடிகையின் கட்செவி கணக்கில் தகவல் திருட்டு: சைபர் குற்றப்பிரிவு விசாரணை

DIN | Published: 22nd February 2019 02:43 AM


நடிகை பூஜா தேவ்ரியா (வாட்ஸ் அப்) கட்செவி அஞ்சல் கணக்கிலிருந்து தகவல்கள் திருடப்பட்டது குறித்து சைபர் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் திரைப்படத்துறையில் பிரபல நடிகையாக இருப்பவர் பூஜா தேவ்ரியா. இவர் இறைவி, ஆண்டவன் கட்டளை, மயக்கம் என்ன உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். 
இந்நிலையில், பூஜா தேவ்ரியாவின்  கட்செவி கணக்கு ஹேக் செய்யப்பட்டு, அதில் இருந்த தகவல்கள் திருடியவர்கள்,நடிகை  தேவ்ரியாவின் தோழிகளையும், நண்பர்களையும்  தொடர்பு கொண்டுள்ளனர். 
இதனால்  அதிர்ச்சியடைந்த  அவர், சென்னை பெருநகர காவல்துறை அலுவலகத்துக்கு புதன்கிழமை சென்று பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விசுவநாதனை சந்தித்து புகார் மனு அளித்தார்.
இப் புகாரின் மீது  நடவடிக்கை எடுக்க, சைபர் குற்றப்பிரிவு போலீஸாருக்கு ஆணையர் விசுவநாதன் உத்தரவிட்டார். முதல் கட்டமாக சைபர் குற்றப்பிரிவு போலீஸார், பூஜா தேவ்ரியாவின்  கட்செவி கணக்கை ஹேக்கர்களின் பிடியில் இருந்து மீட்டனர். 
இதையடுத்து சைபர் குற்றப்பிரிவு போலீஸார்,பூஜா தேவ்ரியாவின்  கட்செவி கணக்கை ஹேக் செய்தவர்கள்  குறித்து விசாரிக்கின்றனர்.
 

More from the section

கள்ளக்குறிச்சியில் சுதீஷ் வேட்புமனு தாக்கல்
சிலை திருட்டு வழக்கு டி.எஸ்.பி. காதர் பாட்சா கைது
கன்னியாகுமரியில்  பொன்.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்
தமாகா தேர்தல் பணிக்குழு அமைப்பு
புதுச்சேரி: வைத்திலிங்கம் வேட்புமனு தாக்கல்