புதன்கிழமை 20 மார்ச் 2019

நீங்க நல்லா இருக்கணும் விஜயகாந்த்: உருகிய ரஜினிகாந்த்!

DIN | Published: 22nd February 2019 12:10 PM


நண்பர் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். விஜயகாந்த் உடனான சந்திப்பில் துளியும் அரசியல் இல்லை என ரஜினிகாந்த் தெரிவித்தார். 

அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் விஜயகாந்தை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று முற்பகல் 11.30 மணியளவில் நேரில் சென்று சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். 

சந்திப்புக்கு பின்னர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் சிகிச்சைக்கு பின் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்தவுடன் முதல் ஆளாக என்னை வந்து சந்தித்தவர் விஜயகாந்த்; அவர் சிகிச்சைக்கு பின் அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் நான் அவர் உடல்நலம் விசாரிக்க வந்தேன். சிகிச்சைக்கு பின் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார். அவர் எப்போதும் நலமுடன் இருக்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன். இந்த சந்திப்பில் துளிகூட அரசியல் கிடையாது என்றார் ரஜினிகாந்த்.

தேமுதிகவுடன் அதிமுகவும், மறுபக்கம் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ரஜினிகாந்தின் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பேசப்படுகிறது. 

More from the section

ஒரு கோடி சாலைப் பணியாளர்கள்: திமுக தேர்தல் அறிக்கை
ஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500: அதிமுக தேர்தல் அறிக்கை
பிளஸ் 2 பொதுத் தேர்வு நிறைவு: ஏப்.19-இல் தேர்வு முடிவுகள்
முதல் நாளில் 22 பேர் வேட்பு மனு தாக்கல்
கொத்தடிமை தொழிலாளர் மீட்புப் பணி: வாகனம் வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி