சனிக்கிழமை 23 மார்ச் 2019

மக்களவைத் தேர்தல் கூட்டணி: திமுக - மதிமுக இடையே பேச்சுவார்த்தை

DIN | Published: 22nd February 2019 11:19 AM


சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில்  இணைந்து போட்டியிட உள்ள மதிமுக  இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக - மதிமுக நிர்வாகிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முன்னாள் எம்.பி. கணேசமுர்த்தி தலைமையிலான மதிமுக குழுவினர் திமுக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
 
திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கனவே 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் தொகுதிப் பங்கீடு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று நண்பகலில் திமுக - விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாட்டுக்கான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
 

More from the section

கள்ளக்குறிச்சியில் சுதீஷ் வேட்புமனு தாக்கல்
சிலை திருட்டு வழக்கு டி.எஸ்.பி. காதர் பாட்சா கைது
கன்னியாகுமரியில்  பொன்.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்
தமாகா தேர்தல் பணிக்குழு அமைப்பு
புதுச்சேரி: வைத்திலிங்கம் வேட்புமனு தாக்கல்