சனிக்கிழமை 23 மார்ச் 2019

மதுரை வந்தடைந்தார் அமித் ஷா

DIN | Published: 22nd February 2019 11:11 AM

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாஜக தேசிய தலைவர் தேசிய தலைவர் அமித் ஷா இன்று மதுரை வந்தடைந்தார். 

பாஜக சார்பில் நாகை, சிவகங்கை, ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் கலந்தாய்வுக் கூட்டம் ராமநாதபுரம் பட்டிணம்காத்தானில் இன்று நடைபெறுகிறது. இதற்காக தனியார் இடத்தில் பிரமாண்ட பந்தலும் அமைக்கப்பட்டுள்ளது. 

கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமித்ஷா தனி விமானம் மூலம் இன்று காலை மதுரை வந்தடைந்தார். அவரை, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் வரவேற்றனர். பின்னர் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாக தளத்தில் இறங்குகிறார். அதைத்தொடர்ந்து அமித் ஷா காரில் கூட்டம் நடைபெறும் மேடைக்கு வருகிறார்.

இக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசியச் செயலர் முரளிதரராவ், தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அமித்ஷா வருகையை முன்னிட்டு ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பிருந்து, இசிஆர் சாலை வரை பாஜக கட்சிக் கொடிகள் கட்டப்பட்டுள்ளன.  

கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மாநிலத் துணைத் தலைவர் குப்புராம், ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் முரளிதரன், செயலர் ஆத்ம கார்த்தி உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
 

More from the section

33 ஏழைக் குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை
அனைத்துப் பள்ளிகளிலும் கல்வித் தொலைக்காட்சியை காண ஏற்பாடு: குழந்தைகளைக் கவர அனிமேஷன் திருக்குறள்
வங்கிகளை இணைப்பதால் சிறப்பாக செயல்பட முடியும்: பரோடா வங்கி பொது மேலாளர்
ஜூன் 3 முதல் இலவச பாடநூல் விநியோகம்: புதிய பாடத் திட்டப் பணிகள் நிறைவு
பேராசிரியர்கள் நியமன முறைகேடு புகார்: வக்பு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை