புதன்கிழமை 20 மார்ச் 2019

மெகா கூட்டணியை கண்டு திமுக கதிகலங்கி உள்ளது: தமிழிசை சவுந்தரராஜன்

DIN | Published: 22nd February 2019 10:25 AM


அதிமுகவின் மெகா கூட்டணியைக் கண்டு திமுக கதிகலங்கி உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

காஞ்சிபுரத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக-பாமக-பாஜக பிரம்மாண்டமான பலமான மெகா வெற்றி கூட்டணி அமைந்துள்ளது. 

தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் கூட்டணியை பாஜக ஏற்படுத்தியுள்ளது. திருநாவுக்கரசர் சந்திருந்தாலும் தேமுதிக எங்களோடுதான் என்ற நம்பிக்கை உள்ளது. 

நாளையும் நமதே; நாற்பதும் நமதே என்று சொல்லும் அளவிற்கு மிக பிரம்மாண்டமான பலமான மெகா கூட்டணி தான் வெற்றி கூட்டணி. மத்தியிலும் மோடி ஆட்சி செய்ய இந்த கூட்டணி வழி வகை செய்யும். தமிழகத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ள இந்த கூட்டணியை கண்டு பதற்றத்தில் திமுக இருக்கிறது என தமிழிசை கூறினார்.

More from the section

ஒரு கோடி சாலைப் பணியாளர்கள்: திமுக தேர்தல் அறிக்கை
ஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500: அதிமுக தேர்தல் அறிக்கை
பிளஸ் 2 பொதுத் தேர்வு நிறைவு: ஏப்.19-இல் தேர்வு முடிவுகள்
முதல் நாளில் 22 பேர் வேட்பு மனு தாக்கல்
கொத்தடிமை தொழிலாளர் மீட்புப் பணி: வாகனம் வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி