திங்கள்கிழமை 25 மார்ச் 2019

அதிமுக எம்பி ராஜேந்திரன் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி

DIN | Published: 23rd February 2019 12:51 PM

மறைந்த அதிமுக எம்பி ராஜேந்திரன் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 

திண்டிவனம் அருகே இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் விழுப்புரம் தொகுதி அதிமுக எம்பி ராஜேந்திரன் உயிரிழந்தார். அவருக்கு வயது 62. விழுப்புரம் மாவட்டம், ஜக்காம்பட்டி வீட்டில் இருந்து அவர் சென்னை புறப்பட்டு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதையடுத்து ராஜேந்திரன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் உள்ள ராஜேந்திரன் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிடோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும் ராஜேந்திரனின் மரணம் அதிமுக தொண்டர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

ராஜேந்திரனின் இறுதி சடங்கானது அவரது சொந்த ஊரான அதானாம்பட்டு கிராமத்தில் நடக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.  

More from the section

மக்களவை, பேரவை இடைத் தேர்தல்கள்வேட்புமனு தாக்கல்:  நாளை கடைசி
மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் அறிவிப்பு: கமல்ஹாசன் போட்டியிடவில்லை
உள் தமிழகத்தில் இன்று வெப்பநிலை உயர வாய்ப்பு
திருப்பரங்குன்றத்தில் பங்குனிப் பெருவிழா தேரோட்டம்
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி