திங்கள்கிழமை 25 மார்ச் 2019

தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்தையில் இழுபறி இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்

DIN | Published: 23rd February 2019 12:21 PM

தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்தையில் இழுபறி இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
எங்கள் கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி, சக்தி வாய்ந்த கூட்டணி.  இது வெற்றி கூட்டணியாக அமையும்.

தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை. முடியும் நேரத்தில் முடியும். தேச நலனுக்காக ஒருங்கிணைவோம், ஒன்றுபடுவோம். இந்த முறை நாற்பதும் நமதே நாடும் நமதே. எதிர்க்கட்சிகள் இனவிரோதி. பயத்தின் உச்சத்தில் ஸ்டாலின் இருக்கிறார்.

மற்ற கட்சிகள் அதிமுக கூட்டணியில் சேரக்கூடாது என்பதற்கான முயற்சியில் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். அதிமுக கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும் என்ற ஸ்டாலினின் எண்ணம் பலிக்காது. இவ்வாறு அவர் கூறினார். 

More from the section

மக்களவை, பேரவை இடைத் தேர்தல்கள்வேட்புமனு தாக்கல்:  நாளை கடைசி
மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் அறிவிப்பு: கமல்ஹாசன் போட்டியிடவில்லை
உள் தமிழகத்தில் இன்று வெப்பநிலை உயர வாய்ப்பு
திருப்பரங்குன்றத்தில் பங்குனிப் பெருவிழா தேரோட்டம்
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி