வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

முகிலனை வெளிக்கொண்டுவர காவல்துறை துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும்: திமுக எம்பி கனிமொழி 

DIN | Published: 23rd February 2019 01:30 PM

முகிலனை வெளிக்கொண்டுவர காவல்துறை துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும் என திமுக எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார். 

கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்துக்கு காரணமான போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர்பான விடியோவை சூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார்.

பின்னர் பிப்ரவரி 15-ஆம் தேதி இரவு சென்னையிலிருந்து நாகர்கோயிலுக்குச் செல்லும் ரயிலில் சென்றுள்ளார். அதன்படி பிப்ரவரி 16-ஆம் தேதி மதுரைக்கு வந்திருக்க வேண்டிய அவரை காணவில்லை. ஒலக்கூர் ரயில் நிலையம் வரை தொடர்பு எல்லைக்குள் இருந்த அவரது செல்லிடப்பேசியைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுதொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் முகிலனைக் கண்டுபிடித்து தரக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி தனது டிவிட்டரில்,
சூழலியலாளர் தோழர் முகிலன் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூடு 'திட்டமிட்ட அரசின் சதி' என்பதை வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்ட பின்னர், கடந்த ஒரு வாரமாக காணவில்லை. விரைவில் அவரை வெளிக்கொண்டுவர காவல்துறை துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

More from the section

180 அரிய வகை தாவரங்கள் குறித்த நூல் வெளியீடு
தமிழகத்தில் 21 ஆயிரம் பேருக்கு காசநோய் பாதிப்பு
நாகர்கோவில்-தாம்பரத்துக்கு சுவிதா ரயில் இயக்கம்
அதிமுக ஆட்சியில்தான் அதிகளவில் பெண்களுக்கான நலத் திட்டங்கள்: முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி
அதிமுக அணியில் பாஜக இடம்பெற்றிருப்பது  ஏற்புடையது அல்ல:  சுப்பிரமணியன் சுவாமி