வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழிசை சௌந்தரராஜன் சந்திப்பு

DIN | Published: 23rd February 2019 02:30 PM

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் இன்று அவரது இல்லத்தில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்தார். 

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி, தமிழகத்தில்கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு எனஅரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக, பாஜக மற்றும் பாமகவுடன் கூட்டணி வைப்பது உறுதியாகியுள்ளது. பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

மேலும் தேமுதிக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் அதிமுக தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், முக்கிய கட்சியான தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ள நிலையில் சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று சந்தித்துப் பேசினார். 

இந்த சந்திப்பின் போது அதிமுக கூட்டணியில் தேமுதிகவின் நிலை குறித்தும், மேலும் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்தும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. 

More from the section

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் கே.நாராயணசாமி: என்.ரங்கசாமி அறிவிப்பு
அமமுகவின் 2-ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: தேனி மக்களவைத் தொகுதியில் தங்கத் தமிழ்ச்செல்வன் போட்டி
மக்களவைத் தேர்தல்: தாக்கத்தை ஏற்படுத்துமா உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான போராட்டம்?
"பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடைபெறாது': கனிமொழி
இறந்தவர் பெயரில் மின் இணைப்பு: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்