வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

உதகையில் தொடரும் குளிர்: அரசினர் தாவரவியல் பூங்காவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பூஜ்யம் டிகிரி செல்சியஸ் பதிவு

DIN | Published: 09th January 2019 01:33 AM


உதகையில் தொடரும் உறைபனியில் அரசினர் தாவரவியல் பூங்காவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை காலையிலும் குறைந்தபட்ச வெப்பநிலை பூஜ்யம் டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.
உதகையில் கடந்த 10 நாள்களாக உறைபனியின் தாக்கம் தொடர்ந்து வருகிறது. இதில் நகரப் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்ப நிலையாக 3 டிகிரி முதல் 6 டிகிரி வரை பதிவாகிறது. ஆனால், உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் திங்கள்கிழமை காலையில் பூஜ்யம் டிகிரி வெப்பநிலை பதிவானதோடு, தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலையிலும் பூஜ்யம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே பதிவாகியிருந்தது. 2015 ஜனவரி 13 ஆம்தேதி உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் ஒரே ஒரு நாள் குறைந்தபட்ச வெப்பநிலையாக பூஜ்யம் டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்த சூழலில் 2019 ஆம் ஆண்டில் தொடர்ந்து இரு நாள்களாக பூஜ்யம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 
உதகையில் தற்போது பிற்பகல் நேரங்களிலேயே கடுமையான குளிர் நிலவுவதால் அடுத்து வரும் நாள்களிலும் உறைபனியின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை மாலையில் வழக்கத்துக்கு மாறாக குளிரின் தாக்கம் அதிக அளவில் இருந்ததால் புதன்கிழமை அதிகாலையில் உதகை நகரின் சில பகுதிகளில் குறைந்தபட்ச வெப்ப நிலையாக பூஜ்யம் டிகிரி செல்சியúஸாடு, மைனஸ் டிகிரி ஏற்படும் நிலையும் ஏற்படலாம் என வானிலை ஆராய்ச்சி மையத்தினர் எச்சரித்துள்ளனர்.
 

More from the section

சூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் மாயமான விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவு
நீங்க நல்லா இருக்கணும் விஜயகாந்த்: உருகிய ரஜினிகாந்த்!
உடல் நலம் விசாரிக்க தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு
மக்களவைத் தேர்தல் கூட்டணி: திமுக - மதிமுக இடையே பேச்சுவார்த்தை
மதுரை வந்தடைந்தார் அமித் ஷா